கிருஷ்ணகிரி: ஏலச்சீட்டு மோசடியில், 10 ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டி.எஸ்.பி., தமிழரசி சமாதானப்படுத்தினார்.அவர்கள், கலெக்டர் சரயுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மாவட் டம், வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் கடந்த, 10 ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள், 2 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, 305 பேர், 13 கோடி ரூபாய்க்கு மேல் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர். ஆனால் சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பி தரவில்லை.இது குறித்து வேப்பனஹள்ளி போலீசாரிடம் அளித்த புகாரில், கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமாக கிருஷ்ணகிரியில், 5 மாடி கட்டடமும், 3 கார்களும், வி.மாதேப்பள்ளியில் சொந்த வீடு, கடைகளும் உள்ளன. அவற்றை பறிமுதல் செய்து, எங்களுக்கு பணம் தரவேண்டும் என, தெரிவித்திருந்தோம். இதற்காக அவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தும், இதுவரை எங்களுக்கு பணத்தை பெற்று தரவில்லை. இத னால் கிருஷ்ணமூர்த்தி தன் பெயரில் இருந்த சொத்தை வேறு ஒருவருக்கு பினாமியாக பத்திரப்பதிவு செய்து விட் டார். எனவே, கிருஷ்ணமூர்த்தியின் சொத்துக்களை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட, 305 பேருக்கும் பணத்தை திருப்பி வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.