உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 மாதங்களாக குழாய் உடைப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

2 மாதங்களாக குழாய் உடைப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில், 60க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள, ஐ.வி.டி.பி., அலுவலகத்திற்கு செல்லும் இடதுபுற நுழைவு வாயிலில் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஓடுகிறது. நீண்ட நாட்கள் சாலையில் குடிநீர் வீணாகி ஓடி வருவதால், அங்கு ஆறு போல் காட்சியளிக்கிறது.இதனால், குடிநீர் வீணாகி வருவதோடு, தண்ணீர் ஓடி சாலை சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த வழியில் ஏராளமான அரசு அதிகாரிகள் சென்று வரும் நிலையில், குடிநீர் குழாய் உடைப்பை யாரும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை