உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சேலம் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த, 18 மதியம், நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். யார் அவர், எந்த ஊரை சேர்ந்தவர், என தெரியவில்லை. இது குறித்து கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஓ., முகமது சுபன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை