உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

கெலமங்கலம்: கெலமங்கலம் ஒன்றியத்தில், 5 கி.மீ., துாரம் ரேஷன் பொருட்கள் வாங்க, மக்கள் சென்று வந்த நிலையில், அதே கிராமத்தில் பகுதி-நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், மேட அக்ர-ஹாரம் பஞ்., உட்பட்ட கல்கான்கொட்டாய் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை இல்லாததால், 5 கி.மீ., தொலைவிலுள்ள பால்னாம்பட்டி கிராமத்திற்கு ரேஷன் பொருட்களை வாங்க, மக்கள் சென்று வந்தனர். இதனால் காலநேரம் விரயமாகி வந்தது. ரேஷன் பொருட்கள் வழங்கும்போது, கூலி வேலைக்கு செல்-லாமல் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதைய-டுத்து, கல்கான்கொட்டாய் கிராமத்தில் புதிதாக பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தி.மு.க., இளைஞரணி மாநில துணைச்செ-யலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்-றிய செயலாளர் சின்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ