உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உடல் உறுப்பு தானம் செய்தவரின் மனைவி உதவி கேட்டு மனு

உடல் உறுப்பு தானம் செய்தவரின் மனைவி உதவி கேட்டு மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் பாபு, 42. இவர் கடந்த, 31 இரவு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழி உள்பட உடல் உறுப்புகள் கடந்த, 2ல், கோவை மருத்துவக்கல்லுாரி, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்த பாபுவின் மனைவி செல்வி, 33, தன் மகன்கள், குடும்பத்தினர் மற்றும் இட்டிக்கல் அகரம் பஞ்., தலைவர் ஈஸ்வரி சேகர் ஆகியோருடன், கலெக்டர் அலுவகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:எனக்கு திருமணமாகி, 13 ஆண்டுகளாகிறது. என் கணவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய நிலையில், அன்றைய தினம் அரசு அலுவலர்கள் எங்கள் வீடு தேடி வந்தனர். அதன்பின் எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனக்கு, 11, 8, 6 வயதில், 3 மகன்கள் உள்ளனர். பேக்கரி கடையில் வேலை பார்த்துதான் என் கணவர் எங்களை காப்பாற்றினார். அவர் இப்போது இல்லை. எங்களுக்கு எந்த சொத்தும் இல்லை. வயதான மாமியாருடன் குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறேன். உதவி கேட்டு, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். 11 வயதுள்ள என் மூத்த மகன் சபரிநாதன், பிறப்பிலிருந்தே, 'அனோரெக்டல் ஒழுங்கின்மை' நோயால் மலப்போக்கு கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆபரேஷன் செய்தும், இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்த முடியாமல், 'பேம்பர்ஸ்' வைத்து பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. அரசு மரியாதை என்ற பெயரில் ஒரு நாள் மதிப்பு கொடுப்பதை விட, எங்கள் குடும்பத்தை சீர்செய்யும் வகையில் அரசு உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை