உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இழப்பீடு கோரி பாலக்கோடு மா விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இழப்பீடு கோரி பாலக்கோடு மா விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 'மா' விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட தலைவர் குமார், மா.கம்யூ., கட்சியின் வட்ட செயலாளர் காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், மாங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், தமிழக அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தி 'மா' விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும், 'மா' கிலோ ஒன்றுக்கு, 3-0 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் மல்லையன் மற்றும் ஏராளமான, 'மா' விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ