மேலும் செய்திகள்
வன உயிரின பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு
08-Oct-2024
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததால், காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க நேற்று, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 18,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க, குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு வினாடிக்கு, 13,000 கன அடியாக நீர்வரத்து சரிந்தால், ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் விதித்திருந்த தடையை நேற்று, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நீக்கியது.
08-Oct-2024