மேலும் செய்திகள்
மருதேரி பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா
05-Sep-2025
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, மருதேரி கிராமத்தில், அறநிலையத்துறை சார்பில், புதிய பட்டாளம்மன் கோவில் கட்டப்பட்டு, கடந்த, 4ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நேற்று முன்தினம் அரை மண்டலம், 24 நாட்கள் பூஜை நடந்த நிலையில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள், 700க்கும் மேற்பட்டோர், பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இரவு விளக்கு பூஜை நடந்தது. நேற்று வருவாய்த்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் ஒன்றிணைந்து சமபந்தி விருந்து நடத்தினர். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
05-Sep-2025