பிளஸ் 2 மாணவன் மாயம்
ஊத்தங்கரை, டிச. 15-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஆட்டுக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் மகன் தருண், 17. இவர், தனது வீட்டில் இருந்து, அரூர் அருகே உள்ள ராமியம்பட்டி கிராமத்தில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 12ல், காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் உஷா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.இதன்படி, ஊத்தகங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.