மேலும் செய்திகள்
கூடலுாரில் மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்
19-Jul-2025
ஓசூர், சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியிலிருந்து இரு சிமென்ட் கலவை மிக்சிங் செய்யும் புதிய லாரிகள், ஓசூர் வழியாக பெங்களூரு அருகே தேவனஹள்ளிக்கு நேற்று சென்றன. ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே, பழைய தொலைபேசி அலுவலக சாலையில், சாலை குறுக்கே சென்ற மின் கம்பியை லாரி ஒன்று இழுத்து சென்றது. இதனால், சாலையோரம் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. மேலும், ஓட்டல் மற்றும் கார்னேசன் கிளப் ஆகிய இரு இடங்களில், மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. அப்பகுதியில் பலத்த சத்தத்துடன் மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நின்ற இரு கார்கள் மீது மோதியதில் அவை சேதமாகின. அப்பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மின்கம்பம் சாய்ந்து, மின் கம்பிகள் துண்டானதால், அண்ணா நகர், சாந்தி நகர், உமாசங்கர் நகர், நேதாஜி ரோடு, அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் சாலை உட்பட நகரில் பல இடங்களில், இரவு, 8:00 மணிக்கு மேலாகியும் மின் வினியோகம் சீராகவில்லை.
19-Jul-2025