உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க.,வினரை கண்டித்து மறியல்; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

தி.மு.க.,வினரை கண்டித்து மறியல்; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ராமன்தொட்டியில் முனுசாமி எம்.எல்.ஏ., நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் நேற்று ராமன்தொட்டியில், 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சூளகிரி, அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பாபு, அத்திமுகம் பஞ்., தலைவர் சுரேஷ், காமன்தொட்டி கிருஷ்ணப்பா, நாராயணப்பா உள்ளிட்ட சிலர் மீது பேரிகை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி