மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்கிருஷ்ணகிரி, நவ. 26-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 593 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய மனுக்கள் மீது விசாரிக்க உத்தரவிட்டார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மற்றும் மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.