உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி வைத்த டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி வைத்த டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைத்த டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்களை, நகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.இது குறித்து, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி நகராட்சியின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் உள்ளன. இது குறித்து கடந்த, ஒருவார காலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அகற்றவில்லை. இன்று நகரின் முக்கிய வீதிகளில் அபாயகரமாக வைத்த, 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. பேனர்கள் வைக்க நகராட்சியின் வழிகாட்டுதல் படி, அனுமதி பெற வேண்டும். மேலும் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அகற்ற வேண்டும். விதிமுறைகள் பின்பற்றப்படாமல் பேனர்கள் வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என எச்சரித்துள்ளோம். எனவே, கடை உரிமையாளர்கள், பேனர் வைப்பர்கள், பேனர் வைக்கும் இடத்தின் கட்டட உரிமையாளர்கள் இதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ