மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது
27-Nov-2025
போச்சம்பள்ளி ; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டில் ஓலா மின்சார வாகனம், செய்யாறு பேர்வேர் ஷூ கம்பெனி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. இதில் ஓலைப்பட்டி கூட்ரோட்டை ஒட்டியுள்ள, சிப்காட்டிற்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலம், எம்.ஜி.கே., என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை, ஓலைப்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தனர்.தனியார் நிறுவனம் கட்டுமான பணி மேற்கொள்ள இருப்-பதால், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பென்சிங் அமைக்கும் பணி நேற்று நடந்தது. ஊத்தங்கரை தாசில்தார் ராஜலட்சுமி, சிப்காட் திட்ட அலுவலர் சிந்து மற்றும் ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில், 50க்கும் மேற்-பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
27-Nov-2025