உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாரச்சந்தையில் ஆடுகள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை

வாரச்சந்தையில் ஆடுகள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த, 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று போச்சம்பள்ளி அடுத்த, வலசகவுண்டனுார் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழாவை முன்னிட்டும், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விவசாயிகள், ஆடுகளை வளர்ப்பதற்கும், திருவிழாவிற்கு கறி விருந்து அளிப்பதற்கும் அதிகளவு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில், 50 லட்சம் ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ