உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சமூக நீதி நாள் உறுதிமொழி

சமூக நீதி நாள் உறுதிமொழி

கிருஷ்ணகிரி: ஈ.வெ.ரா., பிறந்த நாளான செப்., 17 நாளை சமூக நீதி நாளாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 'சமூக நீதிநாள்' உறுதிமொழியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதேபோல அனைத்து அரசு அலுவலகங்களிலும் 'சமூக நீதிநாள்' உறுதிமொழி ஏற்கப்பட்டது.கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்பு, முதல்வர் சத்தியபாமா தலைமையில் நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ், துணை முதல்வர் சுபதா, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் தினேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !