| ADDED : ஜூன் 25, 2024 02:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை ஆலயத்தில், உலக அமைதியும், சமாதானமும் வேண்டி, சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி நடந்தது. பங்குத் தந்தை இசையாஸ் தலைமை வகித்தார்.சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மாடத்தில், முதல் மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நடந்தது. பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஊர்வலமாக புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, 2வது மேடைக்கு கொண்டு வந்து அங்கும், நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.தொடர்ந்து, துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்குத்தந்தை இசையாஸ், உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து இறைமக்களுக்கு இறுதி ஆசீர்தாதம் வழங்கினார். இந்த சிறப்பு நற்கருணை பவனியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.