உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சீனிவாச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

சீனிவாச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி: பிள்ளையார் கோவிலுார், சீனிவாச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கால்வேஅள்ளி பிள்ளையார் கோவிலுார் கிராமத்தில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த, 18ல் துவங்கியது. அன்று காலை, தென்பெண்ணை ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அபிஷேக ஆராதனையுடன் விழா துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜை, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், 108 மூலிகை திரவிய ஹோமம் ஆகியவை நடந்தன.நேற்று காலை, சீனிவாச பெருமாளுக்கு மஹா அபிஷேகம், வேதபாராயணம், 2ம் கால யாக பூஜை, கோ பூஜை, 108 மூலிகை திரவிய ஹோமம், கடம் புறப்பாடும், 9:00 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடந்தன. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை