மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: rசிவகங்கை
26-May-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகில் பொன்மலையில் அமைந்துள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, ஆராதனை, சுவாமி உற்சவர் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை, சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, திருப்பாவை கோஷ்டியும், காலை, 10:00 மணிக்கு, பூர்வாங்க பூஜை மற்றும் லாய ஹோமம், மஹா பூர்ணாஹூதியுடன், சுவாமிக்கு மாலை மாற்றி, மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம், 1:00 மணிக்கு, தீர்த்த, சடாரி பிரசாதம் மற்றும் திருக்கல்யாண விருந்து உபசரிப்பு நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சுவாமி, கோவில் திருசுற்று பல்லக்கு சேவை நடந்தது. இதை, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
26-May-2025