உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கெலமங்கலம் :கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் தேவராஜ், செயல் அலுவலர் மஞ்சுநாத் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். வீட்டுமனைப்பட்டா, மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் வழங்கினர்.