மாணவியை தாக்கியவர் கைது
ஓசூர், ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகரை சேர்ந்த, 16 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 8ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, அப்பகுதியிலுள்ள சனீஸ்வரன் கோவில் முன் நடந்து சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த, தேசிங்கு நகரை சேர்ந்த பெயின்டர் அபினேஷ், 22, மற்றும் மற்றொரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அவர் கல்லை எறிந்ததில், அது மாணவி மீது விழுந்தது. மாணவி காயமடைந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த அலமேலு, 48, என்பவர், சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார், அபினேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.