உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோடை உழவு விழிப்புணர்வு கூட்டம்

கோடை உழவு விழிப்புணர்வு கூட்டம்

கிருஷ்ணகிரி : ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம், கோடை உழவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டாரம் அச்சமங்கலம் கிராமத்தில், 'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் மற்றும் கோடை உழவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கலா தலைமை வகித்து பேசுகையில், ''ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் மூலம், விவசாயிகளுக்கு விதை முதல், பயிர் அறுவடை வரை கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், வேளாண் அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் மூலமாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிகளை விவசாயிகள் கடைபிடித்து, அதன் மூலம், 15 முதல், 20 சதவீத கூடுதல் மகசூல் பெறலாம்,'' என்றார்.இதில், பர்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி பேசும்போது, கோடை உழவு செய்வதன் அவசியம், மண் மாதிரி எடுக்கும் முறை மற்றும் மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். கூட்ட ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தனசேகர் செய்திருந்தார். இதில், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை