உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நெடுஞ்சாலையில் முடிவுற்ற பணிகள்; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

நெடுஞ்சாலையில் முடிவுற்ற பணிகள்; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

ஓசூர் : ஓசூர் பகுதி நெடுஞ்சாலையில், முடிவுற்ற பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை மூலம், ஓசூர் இன்னர் ரிங்ரோடு மற்றும் ஓசூர் அசோக் பில்லர் முதல்-குடிசாதனப்பள்ளி வரையுள்ள தர்மபுரி சாலை ஆகியவை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், ஒருவழிப்பாதையாக இருந்த தீர்த்தம்-பேரிகை இடையே உள்ள மலகலக்கி வழியாக நெரிகம் செல்லும் சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பீர்பள்ளியில், பெட்டக வடிவிலான சிறுபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை, சேலம் வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். மேலும், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் ஓசூர்-தளி சாலை, மத்திகிரி கூட்ரோடு முதல், டி.வி.எஸ்., கம்பெனி வரையிலான சாலை பணிகளை தரத்துடன் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார்.ஆய்வின் போது, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன், ஓசூர் உதவி கோட்ட பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் வெங்கட்ராமன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி