சஸ்பெண்ட் வி.ஏ.ஓ., தற்கொலை
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள குட்டிகவுண்டனுாரை சேர்ந்தவர் பூங்காவனம், 52; வி.ஏ.ஓ.,வான இவர், பணியில் கவனக்குறைவாக இருந்ததால், ஒன்றரை மாதங்களுக்கு முன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மது குடிக்கும் பழக்கத்தால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகாததால், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.