உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியை சுத்தம் செய்தடாடா நிறுவன ஊழியர்கள்

அரசு பள்ளியை சுத்தம் செய்தடாடா நிறுவன ஊழியர்கள்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், நாகமங்கலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மொத்தமுள்ள, 15 வகுப்பறைகளில், 5 வகுப்பறைகள் முதற்கட்டமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள், 120 பேர் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.மேலும், வகுப்பறைகளை சுற்றிலும் பெயின்ட் அடித்து மேம்படுத்தினர். மீதமுள்ள வகுப்பறைகளை சுத்தம் செய்து, பெயின்ட் அடிக்க, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில், இப்பணியை மேற்கொண்டதாக, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி