உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இடமாற்றத்தில் சென்ற ஆசிரியர்கள் திரும்ப வரக்கேட்டு ஆர்ப்பாட்டம்

இடமாற்றத்தில் சென்ற ஆசிரியர்கள் திரும்ப வரக்கேட்டு ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, திருவனப்பட்டி கிராமத்திலுள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில், 6-ம் வகுப்பு முதல், 10-ம் வகுப்பு வரை, 111 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆசிரியர்கள் குமார் மற்றும் நாகமணி ஆகிய இருவர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் பதாகைகளை ஏந்தி தரையில் அமர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்‍போது, 'எங்கள் ஆசிரியர்கள், திரும்ப வந்தால் மட்டுமே பள்ளிக்கு வருவோம்' என, மாணவர்கள் கோஷமிட்டனர். திருவனப்பட்டி, மோட்டூர், வீரவட்டம், நாகம்பட்டி, பள்ளம்பட்டி, சின்ன ஆனந்துார், காமாட்சிப்பட்டி, கொட்டைகள் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், இப்பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களை, முன்னாள் பஞ்., தலைவர் ரஜினி செல்வம் சமாதானம் செய்து, இடமாற்றத்தில் சென்ற ஆசிரியர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வதாக, உறுதி அளித்ததையடுத்து, மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி