மேலும் செய்திகள்
புனித கார்மெல் அன்னை ஆலய திருவிழா கோலாகலம்
22-Jul-2025
கிருஷ்ணகிரி, துாய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழாவில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள துாய விண்ணரசி அன்னை ஆலய, 47ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் தர்மபுரி, வேலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்ட குருக்கள் தலைமையில், நவநாள் திருப்பலி உள்ளிட்ட பல்வேறு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வின் ஒன்றான அன்னையின் தேர் பவனி, நேற்று முன்தினம் இரவு வானவேடிக்கையுடன் நடந்தது. முன்னதாக, காலை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர், முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது.அன்னையின் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை அருட்தந்தை அம்புரோஸ் துவக்கி வைத்தார். ஆலய வளாகத்தில் இருந்து துவங்கிய தேர் பவனி, கந்திகுப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று, மீண்டும் நள்ளிரவில் ஆலயம் வந்தடைந்தது. இதில், பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
22-Jul-2025