உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காயத்ரி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

காயத்ரி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் காயத்ரி அம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டியும், மழை பெய்து விவ-சாயம் செழிக்கவும், நேற்று காலை, 9:30 முதல், மாலை, 5:30 மணி வரை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவனடியார் சிவ மாரியப்பன் தலைமையில், சிவனடியார்கள், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை முற்றோதினர். முன்னதாக, சமய குரவர்கள் நால்-வரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்-கவாசகர் ஆகியோருக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவிலில் இன்று (ஜூலை 28) மாலை, 6:00 மணிக்கு, காயத்ரி அம்மனுக்கு ஆடிபூரத்தையொட்டி வளையல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது. பக்தர்கள் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை