உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விழுந்த மின்கம்பத்தை மீண்டும் அமைக்கவில்லை பள்ளியில் அமைத்த கம்பத்திற்கு மின் இணைப்பு இல்லை

விழுந்த மின்கம்பத்தை மீண்டும் அமைக்கவில்லை பள்ளியில் அமைத்த கம்பத்திற்கு மின் இணைப்பு இல்லை

கிருஷ்ணகிரி, விழுந்த உயர் கோபுர மின்விளக்கு அமைக்காமலும், அமைத்த கம்பத்திற்கு மின் இணைப்பு வழங்காமலும் உள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டை காந்திசிலையைச் சுற்றிலும், நான்கு சாலை உள்ளன. இங்கு கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில், உயர் கோபுர மின்விளக்கு அமைத்தனர். கடந்த மே 1ல், பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால், இந்த உயர் கோபுர மின்விளக்கு முற்றிலும் சாய்ந்தது.இக்கம்பத்தை எடுத்து அருகில் உள்ள சாலையோரம் கிடத்திய நிலையில், 6 மாதங்கள் கடந்தும் இக்கம்பத்தை மீண்டும் அமைக்கவில்லை. இதனால் மின்கம்பம் சேதம் அடைவதோடு, காந்திசிலையைச் சுற்றிலும் போதிய வெளிச்சம் இன்றி, இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதே போல், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தின் நடுவில் கடந்த, 2016ல் உயர் கோபுர மின்விளக்கு அமைத்தனர். ஆனால், மின் இணைப்பு துண்டிப்பால் கடந்த, 6 மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் விளையாட்டு மைதானத்தில் இரவில் சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இரவில் மது குடிப்பவர்கள், நடைபயிற்சி செல்லும் வழியில் மது பாட்டில்களை உடைத்து வீசுவதால், நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், விளையாடும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, விழுந்த உயர் கோபுர மின்விளக்கு மீண்டும் அமைத்து, எரியாமல் உள்ள மின்விளக்கிற்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை