மனைவி இறந்த துக்கம் வியாபாரி மாயம்
ஓசூர்: ஓசூர் கோகுல் நகர் ஜே.பி., லேஅவுட்டை சேர்ந்தவர் அப்பி-ரெட்டி, 36, வியாபாரி. இவரது மனைவி மோனிகா, 26, கடந்த, 24ல் குடும்ப தகராறில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து மருத்துவமனையில் இருந்து மாயமான அப்பிரெட்டி, வீடு திரும்பவில்லை. அவரது தந்தை பாப்பிரெட்டி, 58, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.