உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தர்கள் கண்டு ரசித்தனர். ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

தர்கள் கண்டு ரசித்தனர். ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்துார், தாமோதரஹள்ளி, குடிமேனஹள்ளி பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த, ஓடை புறம்போக்கு நிலம், நேற்று போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா முன்னிலையில் அகற்றப்பட்டன. மொள்ளம்பட்டி கசிவுநீர் குட்டையிலிருந்து பண்ணந்துார் ஏரி வரை ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு செல்லும் ஓடை புறம்போக்கு நிலத்தை, 7க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கலெக்டர் உத்தரவின்படி நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சரவணன், பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ