உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டூவீலர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூவர் பலி

டூவீலர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூவர் பலி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போத்தாபுரம் அருகே, சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி, தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஒன்வேயில் சென்றது. அப்போது அந்த வழியாக, ஸ்கூட்டரில் மூன்று பேர் வந்தனர்.கன்டெய்னர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற மூவரும் உடல் நசுங்கி பலியாகினர். காவேரிப்பட்டணம் போலீசார் சடலங்களை மீட்டனர்.விசாரணையில், ஸ்கூட்டரில் வந்தவர்கள் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே மாம்பட்டியை சேர்ந்த ராகுல், 20, நச்சினம்பட்டி வசந்தகுமார், 28, கணம்பட்டி விஜயகுமார், 25, என்பது தெரிய வந்துள்ளது. கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த, மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர், 38, என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை