| ADDED : ஜன 16, 2024 10:39 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் சபரி, 18; இவர், கடந்த, 13ல் இரவு, 8:00 மணியளவில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். தளிஹள்ளி அருகே காவேரிப்பட்டணம் - வேலம்பட்டி ரோட்டில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் சபரி பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* சூளகிரி அடுத்த செக்கலுாருவை சேர்ந்த மூதாட்டி வண்ணம்மாள், 75; இவர் கடந்த, 13ல் மாலை, 6:15 மணியளவில் இனாம்குட்டப்பட்டி அருகே வேப்பனஹள்ளி - குந்தாரப்பள்ளி சாலையில் நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக வந்த பொலிரோ பிக்கப் வேன் மோதியதில் இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.* ராயக்கோட்டை அடுத்த உப்புக்குட்டையை சேர்ந்தவர் சின்னதம்பி, 52, விவசாயி; இவர், நேற்று முன்தினம் மதியம் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். எல்லப்பன் கொட்டாய் அருகே ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் வந்த போது, எதிரில் வந்த தனியார் பஸ் மோதியதில் இறந்தார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.