உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் மீது சரக்கு வேன் மோதி சிறுவர்கள் உட்பட மூவர் பலி

பைக் மீது சரக்கு வேன் மோதி சிறுவர்கள் உட்பட மூவர் பலி

பர்கூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், போத்திநாயனப்பள்ளி அடுத்த கொத்துாரை சேர்ந்தவர் பேரரசு, 19; கட்டட தொழிலாளி. இவர், தன் உறவினர்களான குருவிநாயனப்பள்ளியை சேர்ந்த மாதவன், 15, சக்தி, 14, ஆகியோருடன் ஒரே, 'பல்சர்' பைக்கில் சென்றுள்ளனர். இரவு, 7:00 மணியளவில் குருவிநாயனப்பள்ளி மேல்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது, அதிவேகமாக சென்ற பைக், எதிரே வந்த சரக்கு வேனில் பயங்கரமாக மோதியது.இதில், பைக்கில் சென்ற பேரரசு, மாதவன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த சக்தி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இறந்தார். மாதவன் ஒன்பதாம் வகுப்பும், சக்தி எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சிறுவர்கள் பைக் ஓட்டுவதை தடுக்கும் வகையில், போலீசார் பைக்குகளை பறிமுதல் செய்து, பெற்றோர் மீது வழக்கு பதிய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை