| ADDED : டிச 17, 2025 08:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பஸ் மீது, மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்-ணகிரி நோக்கி கடந்த, 13-ல், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவ-னத்தில் பணிபுரிவோரை அழைத்து செல்லும், அந்நிறுவன பஸ் சென்றது. பாலகுறி அருகே வந்த போது, பஸ்சின் முன்பகுதியில் மர்மபொருள் விழுந்து வெடித்தது. இதில் பஸ் கண்ணாடி உடைந்து, பஸ்சில் சென்ற நிறுவன ஊழியரான ஆந்திர மாநிலம், கர்னூரை சேர்ந்த மதர்சா தாரணி, 22, என்ற பெண் படு-காயம் அடைந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்தனர். தடவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர். பஸ் மீது பட்டாசு, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் பால-குறி பகுதியைச் சேர்ந்த, 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.