உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்வாரிய அலுவலகம் அருகே தேங்கிய குப்பையால் அவதி

மின்வாரிய அலுவலகம் அருகே தேங்கிய குப்பையால் அவதி

மின்வாரிய அலுவலகம் அருகேதேங்கிய குப்பையால் அவதிகிருஷ்ணகிரி, டிச. 1-கிருஷ்ணகிரி அடுத்த கட்டிக்கானப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே, மின்வாரிய அலுவலகம் உள்ளது. அதன் அருகில், அப்பகுதி குடியிருப்பு பகுதிகளின் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. பிளாஸ்டிக் கவர்கள், புதிதாக கட்டப்படும் கட்டடங்களின் கழிவுகள் உள்ளிட்டவைகள் தேங்கி கிடக்கின்றன. அதை நாய்கள் கிளறி, சாலை நடுவே விட்டு செல்வதால், துர்நாற்றம் வீசுகிறது. கிருஷ்ணகிரியில் நேற்று முதல், மழை பெய்து வரும் நிலையில், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, உடனடியாக குப்பையை அகற்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !