உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மோட்டார், பைப்லைனைஉடைத்த இருவர் கைது

மோட்டார், பைப்லைனைஉடைத்த இருவர் கைது

காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அடுத்த வரட்டடம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி, 60, விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன், 52. உறவினர்களான இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த, 15ல், ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்தம்பி நிலத்திற்கு செல்லும் தண்ணீர் பைப்லைன் மற்றும் விவசாய நிலத்தில் இருந்த மோட்டார் ஆகியவற்றை பச்சையப்பன் தரப்பினர் அடித்து உடைத்தனர். சின்னத்தம்பி புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் பச்சையப்பன், 52, காசியம்மாள், 32, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ