உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இருதரப்பினர் தகராறு; 8 பேருக்கு காப்பு

இருதரப்பினர் தகராறு; 8 பேருக்கு காப்பு

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே, பழையூரை சேர்ந்த விவசாயி மாதையன், 38. இவருக்கும், மற்றொரு தரப்பி-னருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் உள்ளது.கடந்த, 17ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டனர். இதில், மாதையன் தரப்பை சேர்ந்த அவரது உறவினர்களான ராமன், 50, கமலா, 80, மாதம்மாள், 45, ஆகிய, 3 பேர் காயமடைந்தனர்.மாதையன் புகார் படி, பழையூரை சேர்ந்த சின்னசாமி, 52, அவ-ரது மனைவி காவேரி, 48, மற்றும் நாகம்மாள், 45, கவுரம்மாள், 40, ஆகிய, 4 பேரை, ராயக்கோட்டை போலீசார் நேற்று முன்-தினம் கைது செய்தனர்.அதேபோல், தன்னையும், தன் உறவினர்களான கவுரம்மாள், நாகம்மாள் ஆகியோரையும், மாதையன் தரப்பினர் தாக்கியதாக, ராயக்கோட்டை போலீசில் காவேரி புகார் செய்தார். அதன்படி, ராமன், மாதையன், மாதம்மாள், நந்தினி, 25, ஆகிய, 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ