| ADDED : ஆக 11, 2011 02:36 AM
கிருஷ்ணகிரி: போர் மற்றும் போரையொட்டிய நடவடிக்கைகளில் உயிர் நீத்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கருணை தொகை வழங்கப்பட்டது. போர் மற்றும் போரையொட்டிய நடவடிக்கைகளில் உயிர் நீத்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் தொகுப்பு நிதியில் இருந்து கருணை தொகையாக 30,000 ரூபாயும் ஆண்டு பராமரிப்பு தொகையாக இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து 4,000 ரூபாயும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த லான்ஸ் நாயக் பச்சையப்பன் மனைவி தவமணி, சுபேதார் தானப்பன் மனைவி மீனாட்சி ஆகியோருக்கு கருணை தொகை மற்றும் ஆண்டு பராமரிப்பு தொகையை கலெக்டர் மகேஸ்வரன் வழங்கினார்.மேலும், 2008ல் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த அலுவலர்களான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோருக்கு தமிழக கவர்னரின் பாராட்டு சான்று மற்றும் பதக்கங்களை கலெக்டர் மகேஸ்வரன் வழங்கினார். மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் முத்துராம், டி.ஆர்.ஓ., பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.