உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், மதியம், 3:00 மணிக்கு, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக காவேரிப்பட்டணம் பகுதியில் பெய்த திடீர் மழையால், உலர்த்தி வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்தன. மழையால் வெயிலின் தாக்கம் குறைந்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 706 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 727 கன அடியாக அதிகரித்தது. அணை மொத்த உயரமான, 52 அடியில், 50 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணையில் இருந்து பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில், 727 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை