உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ஊத்தங்கரை, ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊத்தங்கரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான சுகாதார பொருட்கள், கல்வி உபகரணங்கள், நிதியுதவி, இனிப்பு ஆகியவற்றை ஊத்தங்கரை மகளிர் மேல்நிலைப்பள்ளி பி.டி.ஏ., தலைவர் தேவராசன், சதீஷ் மெடிக்கல் சதீஷ்பாபு, மகன் ஆரவ் ஆகியோர் வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் ஆடிட்டர் லோகநாதன், மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு ஆசிரியர்கள் பாக்கியராஜ், மாதம்மாள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் பிறந்த நாள் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !