உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காற்றடிக்கும் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்

காற்றடிக்கும் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராம்பட்டியை ‍சேர்ந்தவர் பூங்கொடி, 40, பலுான் வியாபாரி. இவர் திருவிழா நடக்கும் இடங்களில் ஹீலியம் நிரப்பப்பட்ட பலுான்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த, 7 இரவு, 10:00 மணியளவில் பெரிய கவுண்டனுார் மாரியம்மன் கோவில் விழாவில் பலுான் விற்க சென்றுள்ளார். அங்கு ஹீலியம் சிலிண்டரை பயன்படுத்தி பலுான்களில் ஹீலியம் வாயுவை நிரப்பிய போது, சிலிண்டர் வெடித்தது. இதில், பூங்கொடிக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ