மேலும் செய்திகள்
அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
06-Nov-2025
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பாரூர் அடுத்த, புங்கம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த நாகர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகை நாளில், அதிகளவு சேவல், ஆடு-களை வெட்டி மக்கள் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள, 200 அடி உயரமுள்ள குட்டை மலை மீது நேற்று, 12 அடி உயரமுள்ள நாகர் அம்மன் சிலையை கனரக பொக்லைன் இயந்திரம் மூலம் எடுத்துச் சென்று, பீடத்தின் மீது வைத்து கிராம மக்கள் வழிபட்டனர்.அதன் பிறகு புங்கம்பட்டி தென்பெண்ணை ஆற்றிலிருந்து, மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து, பால்குடம், தீர்த்தக்குடங்களுடன், 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக வந்து நாகர் அம்மனை தரிசித்தனர். மாலை 5:00 மணிக்கு விக்-னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் முடித்து தீபாராதனை காட்-டப்பட்டது. இன்று நாகர்குட்டை மலை மீது அமைக்கப்பட்ட, நாகர் அம்ம-னுக்கு கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.
06-Nov-2025