பைக்குடன் வாலிபர் மாயம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பத்தை சேர்ந்தவர் சஞ்சய், 24, கூலித்தொழிலாளி. கடந்த, 30ல், டூவீலரில் வெளியில் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. சஞ்சயின் தந்தை கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். விசாரணையில் சஞ்சய், தன் பைக்கை கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள, டூவீலர் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு சென்றது தெரிந்தது.