உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

ஓசூர், கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா சாலையிலுள்ள நைஸ் ரோடு சந்திப்பில், அம்மாநில ககாலிபுரா வனத்துறையினர் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது, வேட்டையாடிய, 4 மான்கள், ஒரு காட்டுப்பன்றியின் உடல், 6 மான்களின் தோல், 74 கிலோ மான் இறைச்சி ஆகியவை இருந்தது. அதனால் காரில் வந்த, 4 பேரை வனத்துறையினர் கைது செய்ய முயன்றனர். அதில், 3 தப்பியோடிய நிலையில், பிரதாப், 31, என்பவரை வனத்துறையினர் கைது செய்து, இறைச்சியை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து, 2 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.தப்பியோடிய, 3 பேரை பிடிக்க, வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்துள்ளனர். தப்பிய கும்பல், கர்நாடகா மாநில வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளது. எவ்வளவு ஆண்டுகளாக இக்கும்பல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது என, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி