உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண்டல வாலிபால்: ஓசூர் மாணவியர் தேர்வு

மண்டல வாலிபால்: ஓசூர் மாணவியர் தேர்வு

ஓசூர்,தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில், சேலம் மண்டல அளவிலான வாலிபால் அணிக்கு, 19 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகள் தேர்வு நடந்தது. இதில், ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியர் சோனியா, விஷ்ணு பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வான மாணவியரை, பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். இரு மாணவியரும், திருவண்ணாமலை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், நாளை (அக்., 5) நடக்க உள்ள தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ