உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தயாராகும் 346 புதிய பஸ்கள்

தயாராகும் 346 புதிய பஸ்கள்

மதுரை: மதுரையில் இயங்குவதற்காக 133 டவுன் பஸ்கள் உட்பட 346 புதிய பஸ்கள் தயாராகி வருவதாக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்தார்.அவர் கூறியிருப்பதாவது: மதுரை கோட்டத்திற்கு 2022 - 23, 2023 - 24 ம் ஆண்டுகளில் 350 பஸ்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 137 புதிய பஸ்கள் இயங்கி வருகின்றன. காலாவதியான 85 பஸ்கள் கழிவு செய்ய்பபட்டன. மேலும் 213 பஸ்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மதுரை நகருக்கான 133 தாழ்தள பஸ்களும் தயாராகி வருகின்றன. புதிய பஸ்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வரும்போது அதிக உழைப்புத்திறன், வயது அதிகரித்த பஸ்கள் படிப்படியாக கழிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை