மேம்பாலம் அமைக்க வழக்கு
மதுரை : மதுரை ஒத்தக்கடை வழக்கறிஞர் அருண் ராம்நாத். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை கே.கே.நகர் எம்.ஜி.ஆர்., சிலை ரவுண்டானா முதல் ஒத்தக்கடை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயண நேரம் அதிகரிக்கிறது. விபத்துகள் ஏற்படுகின்றன. கே.கே.நகர் ரவுண்டானா முதல் ஒத்தக்கடை விவசாயக் கல்லுாரி வரை மேம்பாலம் அமைக்கக்கோரி மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர், மதுரை கண்காணிப்பு பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,20 க்கு ஒத்திவைத்தது.