உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கணக்காளர் கருத்தரங்கு

கணக்காளர் கருத்தரங்கு

மதுரை: மதுரையில் மாநில அளவிலான பட்டய கணக்காளர் மாணவர்களுக்கு இரண்டு நாள் கருத்தரங்க தொடக்க விழா நடந்தது. ரிசர்வ் வங்கி நிதிக்குழு ஆலோசகர் மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற தேவையானது கனவு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை. இவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்றார். கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், பட்டய கணக்காளர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !