உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மதுரை ஆதினம் * மதுரை ஆதினம் கருத்து

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மதுரை ஆதினம் * மதுரை ஆதினம் கருத்து

மதுரை : ''அ.தி.மு.க., தனது கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காததால்தான் தோல்வியை தழுவியது'' என மதுரை ஆதினம் கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. இந்த காரணத்திற்காகவே காங்., மத்தியில் ஆள முடியவில்லை.இந்திரா தாரைவார்த்த கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும்.பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. அவர் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜ., குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றதால் தோல்வி அடைந்த கட்சி என விமர்சிக்கின்றனர். பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தால் பட்டனை அழுத்தியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள். பா.ஜ., மீது மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் எனக் கூற முடியாது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 99 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது.காங்., ஆட்சியில் எத்தனை முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. ஆனால் பா.ஜ., ஆட்சியில் யாருடைய ஆட்சியையும் கலைக்கவில்லை.இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு வேண்டுமென விரைவில் பிரதமரை சந்திக்க உள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் இருக்கிறார்கள்.பிரதமர் சிவன் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார். விபூதி பூசி கொள்கிறார். காசி விஸ்வநாதர் கோயிலை மீட்டெடுத்தார். எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன். தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காததால்தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது.அக்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. பா.ஜ., நாம் தமிழர் கட்சிகள் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை